Wednesday 11 July 2018

சென்னையில் இந்தியன் அபாகஸ் நடத்திய 2 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற தேசிய அளவிலான மனக்கணக்கு போட்டி அமைச்சர் ஜெயகுமார் தொடங்கி வைத்தார்

2 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற மனக்கணக்கு போட்டி தேசிய அளவில் சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. போட்டியினை அமைச்சர் ஜெயகுமார் தொடங்கி வைத்தார்.
இந்திய அபாகஸ் தேசிய அளவிலான அபாகஸ் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கான மனக்கணக்கு போட்டி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியை அமைச்சர் ஜெயகுமார் தொடங்கி வைத்தார்.
இந்தபோட்டியில், தமிழகத்தில் இருந்து சென்னை, திருச்சி, மதுரை, சேலம், ஈரோடு, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ- மாணவிகள் போட்டியில் பங்கேற்றனர்.
மேலும், அன்டை மாநிலங்களான, கொச்சின், கோட்டையம், பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, கோத்ரா மற்றும் ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் இருந்தும் மற்றும் பிற முக்கிய பகுதிகளில் இருந்தும் ஏராளமான மாணவர்கள், மாணவிகள் இந்த மனக்கணக்கு போட்டியில் பங்கேற்றனர்.
போட்டியானது காலை 10 மணிக்கு தொடங்கி மத்தியம் 1 மணி வரை நடத்தது. குழுக்களாக பிரித்து நடத்தப்பட்ட இந்த போட்டியில், வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு  அமைச்சர் ஜெயக்குமார் பரிசு வழங்கி கவுரவித்தார்.
போட்டியில் பங்கேற்க மாணவர்கள் வந்தது மட்டுமல்லாது, அவர்களது பெற்றோர்களும் ஆர்வத்துடன் வந்து கலந்துக்கொண்டது சிறப்பாகும்.
இந்த தேசிய அளவிலான போட்டியை நடத்திய  குறித்து இந்தியன் அபாகஸ் நிறுவனத்தின் தலைவர் பஷீர் அகம்மது கூறுககையில் , ‘ நாங்கள் ஆண்டு 4 முறை இதுபோன்ற போட்டிகளை நடத்துக்கிறோம். இதானல் மாண- மாணவிகளின் கணித அறிவு மேலும் வளர்வதற்கு உதவியா அமைக்கிறது’ என்றார்

1 comment: